நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

புறநானூறு

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத் தானே

மாறோக்கத்து நப்பசலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அடுநை யாயினும் விடுநை யாயினும்

Next Post

வரை புரையும் மழகளிற்றின் மிசை

Related Posts

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

புறநானூறு சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போலஇரு குடை பின்பட ஓங்கி ஒரு குடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்கநல்லிசை வேட்டம் வேண்டி…
Read More

காலனும் காலம் பார்க்கும் பாராது

புறநானூறு காலனும் காலம் பார்க்கும் பாராதுவேல்ஈண்டு தானை விழுமியோர் தொலையவேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தேதிசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்வெங்கதிர்க்…
Read More

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

புறநானூறு நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்கால்உண வாகச் சுடரொடு கொட்கும்அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்தன்னகம் புக்க…
Read More