வரை புரையும் மழகளிற்றின் மிசை

புறநானூறு

வரை புரையும் மழகளிற்றின் மிசை
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே
நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
எம் அளவு எவனோ மற்றே இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின் கையறவு உடைத்து என
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே

ஆவூர் மூலங் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

Next Post

புறவின் அல்லல் சொல்லிய கறையடி

Related Posts

ஆடு இயல் அழல் குட்டத்து

புறநானூறு ஆடு இயல் அழல் குட்டத்துஆர் இருள் அரை இரவில்முடப் பனையத்து வேர் முதலாக்கடைக் குளத்துக் கயம் காயப்பங்குனி உயர் அழுவத்துத்தலை நாள்மீன் நிலை…
Read More

கோதை மார்பிற் கோதை யானும்

புறநானூறு கோதை மார்பிற் கோதை யானும்கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்மாக்கழி மலர்ந்த நெய்த லானும்கள்நா றும்மே கானல்அம் தொண்டிஅஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்எம்மும் உள்ளுமோ…
Read More

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ

புறநானூறு ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇவாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்ஓடாப் பூட்கை உரவோன் மருகவல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும்…
Read More