சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

புறநானூறு

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே
நிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குண கடல் பின்ன தாகக் குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே

கோவூர்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

செஞ்ஞா யிற்றுச் செலவும்

Next Post

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

Related Posts

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்

புறநானூறு மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்எல்அடிப் படுத்த கல்லாக் காட்சிவில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லெனஇழிபிறப் பாளன் கருங்கை சிவப்பவலிதுரந்து சிலைக்கும்…
Read More

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

புறநானூறு யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்பஇழை வலந்த பஃறுன்னத்துஇடைப் புரைபற்றிப் பிணி விடாஅஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்தபேஎன் பகையென ஒன்று என்கோஉண்ணா மையின் ஊன்…
Read More

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

புறநானூறு சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னேபெரிய கட் பெறினேயாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னேசிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னேஎன்பொடு…
Read More