நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

புறநானூறு

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத் தானே

மாறோக்கத்து நப்பசலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அடுநை யாயினும் விடுநை யாயினும்

Next Post

வரை புரையும் மழகளிற்றின் மிசை

Related Posts

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்

புறநானூறு அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையடுகடுங்கண் கேழல் உழுத பூழிநன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்உழாஅது வித்திய…
Read More

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்

புறநானூறு மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்எல்அடிப் படுத்த கல்லாக் காட்சிவில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லெனஇழிபிறப் பாளன் கருங்கை சிவப்பவலிதுரந்து சிலைக்கும்…
Read More

கடுங்கண்ண கொல் களிற்றால்

புறநானூறு கடுங்கண்ண கொல் களிற்றால்காப் புடைய எழு முருக்கிப்பொன் இயல் புனை தோட்டியான்முன்பு துரந்து சமந் தாங்கவும்பார்உடைத்த குண்டு அகழிநீர் அழுவம் நிவப்புக் குறித்துநிமிர்…
Read More
Exit mobile version