அடுநை யாயினும் விடுநை யாயினும்

புறநானூறு

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே

ஆலத்தூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நளிஇரு முந்நீர் ஏணி யாக

Next Post

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

Related Posts

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

புறநானூறு நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனேஇல்லென மறுக்கும் சிறுமையும் இலனேஇறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்துஇரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்துமருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கிவடுவின்றி வடிந்த…
Read More

ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

புறநானூறு ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலேஅணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றேதிரைவளை முன்கை பற்றிவரைநிழல் சேர்கம் நடந்திசின்…
Read More

பல்சான் றீரே பல்சான் றீரே

புறநானூறு பல்சான் றீரே பல்சான் றீரேசெல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரேதுணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்டகாழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாதுஅடைஇடைக் கிடந்த…
Read More