அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே
நான்கே அணிநிற ஒரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான் கண் அற்று அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
யான்அறி குவென் அது கொள்ளும் ஆறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையலி கூந்தல் நும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

Next Post

கடந்து அடு தானை மூவிரும் கூடி

Related Posts

அடுநை யாயினும் விடுநை யாயினும்

புறநானூறு அடுநை யாயினும் விடுநை யாயினும்நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல்…
Read More

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

புறநானூறு பொய்கை நாரை போர்வில் சேக்கும்நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்மென்புல…
Read More

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

புறநானூறு அளிய தாமே சிறுவெள் ளாம்பல்இளையம் ஆகத் தழையா யினவே இனியேபெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்துஇன்னா வைகல் உண்ணும்அல்லிப் படுஉம் புல் ஆயினவே…
Read More