இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

புறநானூறு

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
அறவை யாயின் நினது எனத் திறத்தல்
மறவை யாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

Next Post

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

Related Posts

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

புறநானூறு உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாதுசில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்துஈங்குஎவன் செய்தியோ பாண பூண்சுமந்துஅம் பகட்டு…
Read More

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

புறநானூறு யாவிர் அயினும் கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே ஔவையார்
Read More

வரை புரையும் மழகளிற்றின் மிசை

புறநானூறு வரை புரையும் மழகளிற்றின் மிசைவான் துடைக்கும் வகைய போலவிரவு உருவின கொடி நுடங்கும்வியன் தானை விறல் வேந்தேநீ உடன்று நோக்கும்வாய் எரிதவழநீ நயந்து…
Read More