இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

புறநானூறு

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
அறவை யாயின் நினது எனத் திறத்தல்
மறவை யாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

Next Post

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

Related Posts

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

புறநானூறு கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்மலங்கு மிளிர் செறுவின் தளம்புதடிந் திட்டபழன வாளைப் பரூஉக்கண் துணியல்புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆகவிலாப்…
Read More

யாண்டுபல வாக நரையில ஆகுதல்

புறநானூறு யாண்டுபல வாக நரையில ஆகுதல்யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்அல்லவை செய்யான் காக்க அதன்தலைஆன்றுஅவிந்து…
Read More
Exit mobile version