உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

புறநானூறு

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து
ஈங்குஎவன் செய்தியோ பாண பூண்சுமந்து
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கிவன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவோம் யாம் என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அன்னச் சேவல் அன்னச் சேவல்

Next Post

கையது கடன் நிறை யாழே மெய்யது

Related Posts

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

புறநானூறு மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரேதுன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரேதாள்தாழ் படுமணி…
Read More

மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

புறநானூறு மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்கடவுட் பேணிய குறவர் மாக்கள்பெயல்கண் மாறிய உவகையர் சாரல்புனைத்தினை அயிலும் நாட…
Read More

இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

புறநானூறு இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்துதழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கிமறைஎனல் அறியா மாயமில் ஆயமொடுஉயர்சினை மருதத்…
Read More