எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே

மதுரைக்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

Next Post

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

Related Posts

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More

எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை ஏறினும்அவணது அறியுநர் யார் என உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்னஇசை…
Read More

வாள் வலந்தர மறுப் பட்டன

புறநானூறு வாள்வலந்தர மறுப் பட்டனசெவ் வானத்து வனப்புப் போன்றனதாள் களங்கொளக் கழல் பறைந்தனகொல் ஏற்றின் மருப்புப் போன்றனதோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவநிலைக்கு ஒராஅ இலக்கம்…
Read More