வாள் வலந்தர மறுப் பட்டன

புறநானூறு

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன
தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
மாவே எறிபதத்தான் இடங் காட்டக்
கறுழ் பொருத செவ் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன
களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன
நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை ஆகன் மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே

பரணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

Next Post

எருமை அன்ன கருங்கல் இடை தோறு

Related Posts

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

புறநானூறு அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாதுஇருள்கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்குஅர சிழந்து…
Read More

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

புறநானூறு கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்தயிர்கொடு வந்த தசும்பும் நிறையஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்முகந்தனர்…
Read More

வரை புரையும் மழகளிற்றின் மிசை

புறநானூறு வரை புரையும் மழகளிற்றின் மிசைவான் துடைக்கும் வகைய போலவிரவு உருவின கொடி நுடங்கும்வியன் தானை விறல் வேந்தேநீ உடன்று நோக்கும்வாய் எரிதவழநீ நயந்து…
Read More