அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே

மருதினிள நாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

Next Post

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

Related Posts

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

புறநானூறு எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கிவிளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவேவிறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவேதேர்தர வந்த சான்றோர்…
Read More

கையது வேலே காலன புழல்

புறநானூறு கையது வேலே காலன புழல்மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னகவெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்சுரி இரும் பித்தை பொலியச் சூடிவரி வயம் பொருத வயக்களிறு…
Read More
புறநானூறு Purananooru

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்இன்னாது என்றலும்…
Read More