மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

புறநானூறு

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச் சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே

நலங்கிள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

Next Post

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

Related Posts

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

புறநானூறு வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடி தடக்கைஆர்கலி நறவின் அதியர் கோமான்போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சிபால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னிநீல…
Read More

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

புறநானூறு நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனேமுழுமுத றொலைந்த கோளி யாலத்துக்கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாதுநல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇஇளைய…
Read More

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்ஆள் அன்று என்று வாளின் தப்பார்தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்மதுகை இன்றி வயிற்றுத் தீத்…
Read More