மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

புறநானூறு

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச் சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே

நலங்கிள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

Next Post

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

Related Posts

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்

புறநானூறு வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்பூழி மயங்கப் பல உழுது வித்திப்பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்களை…
Read More

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

புறநானூறு பொன்னும் துகிரும் முத்தும் மன்னியமாமலை பயந்த காமரு மணியும்இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்துஅருவிலை நன்கலம் அமைக்கும் காலைஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்சான்றோர் பாலர்…
Read More

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

புறநானூறு நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றேமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்அதனால் யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே மோசிகீரனார்
Read More
Exit mobile version