நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

புறநானூறு

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவு நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே

காரிக்கண்ணனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வல்லா ராயினும் வல்லுந ராயினும்

Next Post

ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்

Related Posts

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

புறநானூறு இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றேஒருவீர் தோற்பினும் தோற்ப நும்…
Read More

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

புறநானூறு கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்தசெவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவாவாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்காடுமுன் னினனே கட்கா முறுநன்தொடிகழி…
Read More