மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

பூதப்பாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

Next Post

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

Related Posts

அன்னச் சேவல் அன்னச் சேவல்

புறநானூறு அன்னச் சேவல் அன்னச் சேவல்ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்மையல் மாலை யாம் கையறுபு…
Read More

நெல் அரியும் இருந் தொழுவர்

புறநானூறு நெல் அரியும் இருந் தொழுவர்செஞ் ஞாயிற்று வெயில் முனையின்தென் கடல்திரை மிசைப்பா யுந்துதிண் திமில் வன் பரதவர்வெப் புடைய மட் டுண்டுதண் குரவைச்…
Read More

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

புறநானூறு எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கிவிளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவேவிறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவேதேர்தர வந்த சான்றோர்…
Read More