தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

புறநானூறு

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க இவண் தணிக எனக் கூறி
வினவல் ஆனா முதுவாய் இரவல
தைத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ அல்லது சுடுதீ அறியாது
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கையது கடன் நிறை யாழே மெய்யது

Next Post

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

Related Posts

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ

புறநானூறு ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇவாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்ஓடாப் பூட்கை உரவோன் மருகவல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும்…
Read More

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன

புறநானூறு கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்னபாறிய சிதாரேன் பலவுமுதல் பொருந்தித்தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்த என்உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கிமான்கணம் தொலைச்சிய குருதியங்…
Read More

மாவா ராதே மாவா ராதே

புறநானூறு மாவா ராதே மாவா ராதேஎல்லார் மாவும் வந்தன எம்இல்புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்தசெல்வன் ஊரும் மாவா ராதேஇருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்விலங்கிடு பெருமரம்…
Read More