மாசற விசித்த வார்புஉறு வள்பின்

புறநானூறு

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்து நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடம் கமழ
இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

மோசிகீரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நாடன் என்கோ ஊரன் என்கோ

Next Post

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

Related Posts

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

புறநானூறு மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்பால்தர வந்த பழவிறல் தாயம்எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனகுடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னேமண்டுஅமர்ப்…
Read More

இவன் யார் என்குவை ஆயின் இவனே

புறநானூறு இவன் யார் என்குவை ஆயின் இவனேபுலிநிறக் கவசம் பூம்பொறி சிதையஎய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்மறலி அன்ன களிற்றுமிசை யோனேகளிறே முந்நீர் வழங்கு நாவாய்…
Read More

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்துஅளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்துவிழுமியம் பெரியம் யாமே நம்மிற்பொருநனும்…
Read More