இவன் யார் என்குவை ஆயின் இவனே

புறநானூறு

இவன் யார் என்குவை ஆயின் இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

பாணர் தாமரை மலையவும் புலவர்

Next Post

கடுங்கண்ண கொல் களிற்றால்

Related Posts

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

புறநானூறு ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கின் கழுவாயும் உள எனநிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி…
Read More

நுங்கோ யார் வினவின் எங்கோக்

புறநானூறு நுங்கோ யார் வினவின் எங்கோக்களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்யாமைப் புழுக்கின் காமம் வீடஆராஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅவைகுதொழின் மடியும் மடியா விழவின்யாணர் நல்நாட்…
Read More