ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கையது வேலே காலன புழல்

Next Post

எருதே இளைய நுகம் உணராவே

Related Posts

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்பெருவிற லமரர்க்கு வென்றி தந்தகறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறைநுதல் விளங்கு மொருகண் போலவேந்துமேம் பட்ட…
Read More

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

புறநானூறு நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்தவேக வெந்திறல் நாகம் புக்கெனவிசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்…
Read More
Exit mobile version