ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கையது வேலே காலன புழல்

Next Post

எருதே இளைய நுகம் உணராவே

Related Posts

நும்படை செல்லுங் காலை அவர்படை

புறநானூறு நும்படை செல்லுங் காலை அவர்படைஎறித்தெறி தானை முன்னரை எனாஅஅவர்படை வருஉங் காலை நும்படைக்கூழை தாங்கிய அகல் யாற்றுக்குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅஅரிதால்…
Read More

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

புறநானூறு நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனைஇவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்களிறுகண்டு அழூஉம் அழாஅல்…
Read More

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்

புறநானூறு வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்பூழி மயங்கப் பல உழுது வித்திப்பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்களை…
Read More