புறநானூறு
யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே
ஔவையார்
புறநானூறு
யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே
ஔவையார்
புறநானூறு
களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே
ஔவையார்
புறநானூறு
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே
காவற்பெண்டு
புறநானூறு
என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்
ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
ஆடன்று என்ப ஒருசா ரோரே
நல்லபல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே
நக்கண்ணையார்
புறநானூறு
என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே
நக்கண்ணையார்
புறநானூறு
கையது வேலே காலன புழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரி இரும் பித்தை பொலியச் சூடி
வரி வயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே
ஔவையார்
புறநானூறு
அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே
என்போற் பெருவிதுப் புறுக என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே
நக்கண்ணையார்
புறநானூறு
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய் செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு
புறநானூறு
சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே
சாத்தந்தையார்
புறநானூறு
ஒரு சார் அருவி ஆர்ப்ப ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே பல் வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே
கபிலர்