உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

புறநானூறு

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக் கவுரியர் மருக
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்
பொலங் கழற்காற்புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே

இரும்பிடர்த் தலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மண் திணிந்த நிலனும்

Next Post

வாள் வலந்தர மறுப் பட்டன

Related Posts

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

புறநானூறு நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்மன்னுயிர் நிழற்று நிழலு மில்லைவளிமிகின் வலியு மில்லை யொளிமிக்கவற்றோ ரன்ன சினப்போர் வழுதிதண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்துகொண்டி வேண்டுவ…
Read More

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்பெருவிற லமரர்க்கு வென்றி தந்தகறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறைநுதல் விளங்கு மொருகண் போலவேந்துமேம் பட்ட…
Read More

அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு அளிதோ தானே பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மேஇரண்டே தீஞ்சுளைப்…
Read More