Tag: வெண்பா

  • நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

    புறநானூறு

    நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
    மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
    வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
    கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
    தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
    கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
    கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
    அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
    நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
    செம்புற் றீயல் போல
    ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

    ஐயூர் முடவனார்

  • மாசற விசித்த வார்புஉறு வள்பின்

    புறநானூறு

    மாசற விசித்த வார்புஉறு வள்பின்
    மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
    ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
    பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
    குருதி வேட்கை உருகெழு முரசம்
    மண்ணி வாரா அளவை எண்ணெய்
    நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
    அறியாது ஏறிய என்னைத் தெறுவர
    இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
    அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
    அதனொடும் அமையாது அணுக வந்து நின்
    மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
    வீசி யோயே வியலிடம் கமழ
    இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
    உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
    விளங்கக் கேட்ட மாறுகொல்
    வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

    மோசிகீரனார்

  • நாடன் என்கோ ஊரன் என்கோ

    புறநானூறு

    நாடன் என்கோ ஊரன் என்கோ
    பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
    யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
    புனவர் தட்டை புடைப்பின் அயலது
    இறங்குகதிர் அலமரு கழனியும்
    பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே

    பொய்கையார்

  • கோதை மார்பிற் கோதை யானும்

    புறநானூறு

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள்நா றும்மே கானல்அம் தொண்டி
    அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல
    அமர்மேம் படூஉங் காலை நின்
    புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே

    பொய்கையார்

  • வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

    புறநானூறு

    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
    நெடிய என்னாது சுரம்பல கடந்து
    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
    பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி
    ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
    பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே திறம்பட
    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
    ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
    மண்ணாள் செல்வம் எய்திய
    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

    கோவூர் கிழார்

  • நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

    புறநானூறு

    நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
    இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
    இவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
    தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
    களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
    புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
    விருந்திற் புன்கண்நோ வுடையர்
    கெட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே

    கோவூர் கிழார்

  • இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

    புறநானூறு

    இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
    கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
    நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடு
    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
    ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே
    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
    குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
    நும்மோர் அன்ன வேந்தர்க்கு
    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே

    கோவூர் கிழார்

  • இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

    புறநானூறு

    இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
    நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
    திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
    நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
    அலமரல் யானை உருமென முழங்கவும்
    பாலில் குழவி அலறவும் மகளிர்
    பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
    வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
    இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
    துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
    அறவை யாயின் நினது எனத் திறத்தல்
    மறவை யாயின் போரொடு திறத்தல்
    அறவையும் மறவையும் அல்லை யாகத்
    திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
    நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
    நாணுத்தக வுடைத்திது காணுங் காலே

    கோவூர் கிழார்

  • நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

    புறநானூறு

    நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
    தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
    கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
    அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
    கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
    தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
    தபுதி யஞ்சிச் சீரை புக்க
    வரையா ஈகை உரவோன் மருக
    நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
    தேர்வண் கிள்ளி தம்பி வார் கோல்
    கொடுமர மறவர் பெரும கடுமான்
    கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
    ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
    பார்ப்பார் நோவன செய்யலர் மற்றுஇது
    நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி
    நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
    நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே
    தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
    இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
    காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
    யானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள்
    மிக்குவரும் இன்னீர்க் காவிரி
    எக்கர் இட்ட மணலினும் பலவே

    தாமப்பல் கண்ணனார்

  • ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்

    புறநானூறு

    ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்
    றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
    வல்லை மன்ற நீநயந் தளித்தல்
    தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
    காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
    ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
    திங்க ளனையை யெம்ம னோர்க்கே

    சீத்தலைச்சாத்தனார்