ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

புறநானூறு

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
தானையும் கடலென முழங்கும் கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
புரைதீர்ந் தன்று அது புதுவதோ அன்றே
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ என்று நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
புலிபுறங் காக்கும் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே
நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே

இடைக்காடனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

காலனும் காலம் பார்க்கும் பாராது

Next Post

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

Related Posts

இவன் யார் என்குவை ஆயின் இவனே

புறநானூறு இவன் யார் என்குவை ஆயின் இவனேபுலிநிறக் கவசம் பூம்பொறி சிதையஎய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்மறலி அன்ன களிற்றுமிசை யோனேகளிறே முந்நீர் வழங்கு நாவாய்…
Read More

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

யானை தந்த முளிமர விறகின்

புறநானூறு யானை தந்த முளிமர விறகின்கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்துமடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பிமந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்பேரஞர்க் கண்ணள்…
Read More