புறநானூறு
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே
சாத்தந்தையார்
புறநானூறு
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே
சாத்தந்தையார்
புறநானூறு
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே
ஔவையார்
புறநானூறு
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே
சாத்தந்தையார்
புறநானூறு
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே
ஔவையார்
புறநானூறு
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே
ஔவையார்
புறநானூறு
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறி நீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே
ஔவையார்
புறநானூறு
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே
ஔவையார்
புறநானூறு
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
ஔவையார்
புறநானூறு
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
மறப்புலி உடலின் மான்கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீ களம் புகினே
ஔவையார்
புறநானூறு
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே
கபிலர்