சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து எனக்
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நளி கடல் இருங் குட்டத்து

Next Post

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

Related Posts

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது

புறநானூறு மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காதுஅன்புகண் மாறிய அறனில் காட்சியடுநும்ம னோரும்மற்று இனையர் ஆயின்எம்மனோர் இவண் பிறவலர் மாதோசெயிர்தீர் கொள்கை எம்வெங் காதலிஉயிர்சிறிது உடையள்…
Read More

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

புறநானூறு கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்தேர்வழங்…
Read More

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்

புறநானூறு கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்கார்வான் இன்னுறை தமியள் கேளாநெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்அரிமதர் மழைக்கண் அம்மா அரிவைநெய்யடு துறந்த…
Read More