ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

புறநானூறு

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன்வளவன் வாழ்கஎன்று நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெரும இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே

ஆலத்தூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

Next Post

நளிஇரு முந்நீர் ஏணி யாக

Related Posts

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை…
Read More

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

புறநானூறு தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாணகயத்து வாழ் யாமை காழ்கோத் தன்னநுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணைஇனிய காண்க இவண் தணிக எனக் கூறிவினவல் ஆனா…
Read More

நும்படை செல்லுங் காலை அவர்படை

புறநானூறு நும்படை செல்லுங் காலை அவர்படைஎறித்தெறி தானை முன்னரை எனாஅஅவர்படை வருஉங் காலை நும்படைக்கூழை தாங்கிய அகல் யாற்றுக்குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅஅரிதால்…
Read More