இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு

இரு முந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே
திருவில் அல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே
அம்பு துஞ்சும்கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே

குறுங்கோழியூர்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

Next Post

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்

Related Posts

கலஞ்செய் கோவே கலங்செய் கோவே

புறநானூறு கலஞ்செய் கோவே கலங்செய் கோவேஇருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகைஅகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளைநனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவேஅளியை நீயே யாங்கு ஆகுவை கொல்நிலவரை…
Read More

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

புறநானூறு அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்வேட்டச் சிறா அர் சேட்புலம் படராதுபடைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவையாணர் நல்லவை பாணரொடு ஓராங்குவருவிருந்து அயரும்…
Read More