வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

புறநானூறு

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே திறம்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

Next Post

கோதை மார்பிற் கோதை யானும்

Related Posts

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்

புறநானூறு ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்பாடிப் பெற்ற பொன்னணி யானைதமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்கண்மாறு நீட்ட…
Read More

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More