மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

புறநானூறு

மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே

கழாஅத் தலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

Next Post

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

Related Posts

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்

புறநானூறு செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோபாடுநர் போலக் கைதொழுது ஏத்திஇரந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்மண்டமர் கடக்கும் தானைத்திண்தேர் வளவற் கொண்ட…
Read More

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

புறநானூறு சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போலஇரு குடை பின்பட ஓங்கி ஒரு குடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்கநல்லிசை வேட்டம் வேண்டி…
Read More

எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

புறநானூறு எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோபருகு அன்ன வேட்கை இல்அழிஅருகிற் கண்டும் அறியார் போலஅகம்நக வாரா முகன்அழி பரிசில்தாள்இலாளர் வேளார் அல்லர்வருகென வேண்டும் வரிசை…
Read More