அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

புறநானூறு

அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே
நல்யாழ்ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே

நெடும்பல்லியத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

Next Post

மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

Related Posts

அடுநை யாயினும் விடுநை யாயினும்

புறநானூறு அடுநை யாயினும் விடுநை யாயினும்நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல்…
Read More

ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்

புறநானூறு ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்பெருமா விலங்கைத் தலைவன்…
Read More

குன்றும் மலையும் பலபின் ஒழிய

புறநானூறு குன்றும் மலையும் பலபின் ஒழியவந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு எனநின்ற என்நயந்து அருளி ஈது கொண்டுஈங்கனம் செல்க தான் என என்னையாங்குஅறிந் தனனோ…
Read More