கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

புறநானூறு

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்கு மிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின் தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி விசைத் தெழுந்து
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எ·குவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்
தாமறி குவர்தமக்கு உறுதி யாம் அவன்
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே தாழாது
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே

மதுரைக் குமரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்

Next Post

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

Related Posts

நுங்கோ யார் வினவின் எங்கோக்

புறநானூறு நுங்கோ யார் வினவின் எங்கோக்களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்யாமைப் புழுக்கின் காமம் வீடஆராஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅவைகுதொழின் மடியும் மடியா விழவின்யாணர் நல்நாட்…
Read More

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

புறநானூறு மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅதுஉரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறுநிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்குஉடலருந் துப்பின் ஒன்றுமொழி…
Read More

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்துஅடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்துஎன்னொடு பொருந்தும் என்ப அவரைஆரமர் அலறத் தாக்கித் தேரொடுஅவர்ப்புறம் காணேன் ஆயின் –…
Read More