எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு

எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை இருள்
யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Next Post

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

Related Posts

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

புறநானூறு உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்தமியர் உண்டலும் இலரே முனிவிலர்துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்உலகுடன்…
Read More

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

புறநானூறு அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலேஅடுதோள் முயங்கல் அவைநா ணுவலேஎன்போற் பெருவிதுப் புறுக என்றும்ஒருபால் படாஅது ஆகிஇருபாற் பட்ட இம்…
Read More

மன்றப் பலவின் மாச்சினை மந்தி

புறநானூறு மன்றப் பலவின் மாச்சினை மந்திஇரவலர் நாற்றிய விசிகூடு முழவின்பாடின் தெண்கண் கனி செத்து அடிப்பின்அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்கழல் தொடி ஆஅய்…
Read More