அழல் புரிந்த அடர் தாமரை

புறநானூறு

அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்
பாண் முற்றுக நின் நாள்மகிழ் இருக்கை
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்துபுலர் அகலம் ஆங்க
முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்பக்
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்குஅளித்தலும்
ஒடியா முறையின் மடிவிலை யாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
நகைப் புறனாக நின் சுற்றம்
இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

Next Post

செஞ்ஞா யிற்றுச் செலவும்

Related Posts

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய

புறநானூறு யான்வாழும் நாளும் பண்ணன் வாழியபாணர் காண்க இவன் கடும்பினது இடும்பையாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்னஊணொலி அரவந் தானும் கேட்கும்பொய்யா எழிலி பெய்விடம் நோக்கிமுட்டை…
Read More

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

புறநானூறு ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்யானையும் மலையின் தோன்றும் பெரும நின்தானையும் கடலென முழங்கும் கூர்நுனைவேலும் மின்னின் விளங்கும் உலகத்துஅரைசுதலை பனிக்கும்…
Read More

அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு அளிதோ தானே பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மேஇரண்டே தீஞ்சுளைப்…
Read More