சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

புறநானூறு

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது-
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத் தோர் நின் தெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின்செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

Next Post

அழல் புரிந்த அடர் தாமரை

Related Posts

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

புறநானூறு திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடிவச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்போர்ப்புறு முரசும் கறங்கஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே உறையூர் ஏணிச்சேரி…
Read More

நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்

புறநானூறு நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்யார்க்கும் எளிதே தேர் ஈதல்லேதொலையா நல்லிசை விளங்கு மலயன்மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்பயன்கிழு முள்ளூர் மீமிசைப்பட்ட மாரி…
Read More

நளிஇரு முந்நீர் ஏணி யாக

புறநானூறு நளிஇரு முந்நீர் ஏணி யாகவளிஇடை வழங்கா வானம் சூடியமண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்அரசுஎனப் படுவது நினதே பெருமஅலங்குகதிர்க்…
Read More