வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

புறநானூறு

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
கனைஎரி உரறிய மருங்கும் நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப நின் கண்டனென் வருவல்
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே

கல்லாடனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

தூங்கு கையான் ஓங்கு நடைய

Next Post

நெல் அரியும் இருந் தொழுவர்

Related Posts

இரவலர் புரவலை நீயும் அல்லை

புறநானூறு இரவலர் புரவலை நீயும் அல்லைபுரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்குஈவோர் உண்மையும் காண் இனி நின்ஊர்க்கடுமரம் வருந்தத் தந்து யாம்…
Read More

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

புறநானூறு போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மைஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாதுஇளையன் என்று…
Read More

மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

புறநானூறு மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்பஇருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்பஉழவர் ஓதை மறப்ப விழவும்அகலுள் ஆங்கண் சீறூர்…
Read More