வழிபடு வோரை வல்லறி தீயே

புறநானூறு

வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தருங் கானல் நெடியோய்
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே

ஊன் பொதி பசுங் குடையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

Next Post

அரி மயிர்த் திரள் முன்கை

Related Posts

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ

புறநானூறு ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇவாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்ஓடாப் பூட்கை உரவோன் மருகவல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும்…
Read More

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணிமன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்துதெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலிவெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரேஎஞ்சுவர் கொல்லோ…
Read More

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

புறநானூறு முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டுபச்சூன் தின்று பைந்நிணப் பெருத்தஎச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்புலம்புக் கனனே…
Read More