மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

புறநானூறு

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

நலங்கிள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

Next Post

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

Related Posts

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

புறநானூறு தெண்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்உண்பது நாழி உடுப்பவை இரண்டேபிறவும் எல்லாம்…
Read More

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை பெரும எமக்கே மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே ஔவையார்
Read More

என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

புறநானூறு என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னேயாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மேபோறெதிர்ந்து என் போர்க்களம் புகினேகல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்குஉமணர்…
Read More
Exit mobile version