காலனும் காலம் பார்க்கும் பாராது

புறநானூறு

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

கோவூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *