புறநானூறு
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
மடவரல் உண்கண் வாள்நதல் விறலி
பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்
அது போர் என்னும் என்னையும் உளனே
ஔவையார்
Leave a Reply Cancel reply