புறநானூறு
சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது-
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத் தோர் நின் தெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின்செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
Leave a Reply Cancel reply