ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கையது வேலே காலன புழல்

Next Post

எருதே இளைய நுகம் உணராவே

Related Posts

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணிமன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்துதெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலிவெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரேஎஞ்சுவர் கொல்லோ…
Read More

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி…
Read More

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More