முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
தோள் கழியடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை ஆகலின்போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

Next Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Related Posts

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

புறநானூறு ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராதுஇலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்தவல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்முதுகுமெய்ப் புலைத்தி போலத்தாவுபு தெறிக்கும்…
Read More

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்

புறநானூறு அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சிஇரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்அறம்அறக் கணட நெறிமாண் அவையத்துமுறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்தபவியற் கொள்கைத்…
Read More

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே…
Read More