வினை மாட்சிய விரை புரவியடு

புறநானூறு

வினை மாட்சிய விரை புரவியடு
மழை யுருவின தோல் பரப்பி
முனை முருங்கத் தலைச்சென்று அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக்
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணை வேண்டாச் செரு வென்றிப்
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனிப் பகன்றைக் சுனிப் பாகல்
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண்பணை பாழ் ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை
நாம நல்லமர் செய்ய
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே

பாண்டரங் கண்ணனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

Next Post

தென் குமரி வட பெருங்கல்

Related Posts

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

புறநானூறு நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்இளையன் இவன் என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையும் தேரும் மாவும்படைஅமை மறவரும் உடையும்…
Read More

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

புறநானூறு குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கிஅல்லி உணவின் மனைவியடு இனியேபுல்என் றனையால்…
Read More

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

புறநானூறு மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சிபோதுவிரி பன்மர னுள்ளும் சிறந்தகாதல் நன்மரம் நீ நிழற் றிசினேகடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்ததொடியுடை மகளிர் அல்குலும் கிடத்திகாப்புடைப்…
Read More