நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

புறநானூறு

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
செம்புற் றீயல் போல
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

ஐயூர் முடவனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மாசற விசித்த வார்புஉறு வள்பின்

Next Post

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

Related Posts

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய

புறநானூறு தலையோர் நுங்கின் தீங்சோறு மிசையஇடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகரநிலமார் வையத்து வலமுறை வளைஇவேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடுஆற்றல்…
Read More

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

புறநானூறு காய்நெல் அறுத்துக் கவளங் கொளினேமாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினேவாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினேகோடி யாத்து…
Read More

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More
Exit mobile version