முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
தோள் கழியடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை ஆகலின்போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

Next Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Related Posts

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

புறநானூறு கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்மலங்கு மிளிர் செறுவின் தளம்புதடிந் திட்டபழன வாளைப் பரூஉக்கண் துணியல்புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆகவிலாப்…
Read More

பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்

புறநானூறு பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கிநிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்இடங் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடுஇன்னுயிர் விரும்பும் கிழமைத்தொன்னட்…
Read More

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புறநானூறு ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவது அன்று இவ் உலகத்து இயற்கைஇன்றின் ஊங்கோ கேளலம் திரளரைமன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்துசெறியத்…
Read More
Exit mobile version