போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே
களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத்தோ லன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Next Post

முனைத் தெவ்வர் முரண் அவியப்

Related Posts

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோஊர்கொள வந்த பொருநனொடுஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே…
Read More

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரை

புறநானூறு ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரைசென்று நின் றோர்க்கும் தோன்றும் மன்றகளிறு மென்று இட்ட கவளம் போலநறவுப் பிழிந் திட்ட கோதுடைச்…
Read More

மீன்உண் கொக்கின் தூவி அன்ன

புறநானூறு மீன்உண் கொக்கின் தூவி அன்னவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகைஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்நோன்கழை துயல்வரும் வெதிரத்துவான்பெயத் தூங்கிய சிதரினும்…
Read More
Exit mobile version