புறநானூறு
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே
நிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குண கடல் பின்ன தாகக் குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே
கோவூர்கிழார்
Leave a Reply Cancel reply