திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறி நீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

Next Post

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

Related Posts

பொய்யா கியரோ பொய்யா கியரோ

புறநானூறு பொய்யா கியரோ பொய்யா கியரோபாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றியபொன்புனை திகிரியின் பொய்யா கியரோஇரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்பூண்போர்அடு தானை…
Read More

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

புறநானூறு திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடிவச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்போர்ப்புறு முரசும் கறங்கஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே உறையூர் ஏணிச்சேரி…
Read More
Exit mobile version